மொனாராகலை மாவட்டத்தில் பெருங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள, புனித கபில்வத்தை முருகன் ஆலய வருடாந்த புனித யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை 17 ம் திகதி ஆரம்பமாகியது.
மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருங்காட்டுப்பகுதியில் குமுக்கன் ஆற்றங்கரை ஓரமான அமைந்துள்ள இந்த புனித தலம், கற்பக விருட்சம் என அழைக்கப்படும் புனித புளிய மரம் ஒன்றே அமைந்துள்ளது.

முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும், ரிஷிகளும் முனிகளும் தவம் செய்ததாகவும், பல வரலாற்று இதிகாச புராணங்களுடனும் மகாவம்சங்களுடனும் தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது.
இப் புனித பயணத்தில் சித்தர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு உலக நன்மை வேண்டியும் யாகங்களும், சித்த யகாமும், நாத ஒலியில் முருக வழிபாடும், சத்ரு சங்கார யாகமும், வேல் பூஜை, கபிலவன பூஜை, பக்தி பூர்வமாக நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புனித கபில்வத்தை பயணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவுடன் சிறப்பாக நிறைவுற்றது.
21 நாட்கள் முருகப்பெருமானை நினைத்து விரதமிருந்து இப் புனித பயணம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்க மக்களும், தமிழ் மக்களும் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதும் சிறப்பம்சமாகும்.
