பேத்தை மீன்

பேத்தை மீன்

🔵பேத்தா அல்லது பேத்தை மீன் அல்லது பேத்தையன் மீன் அல்லது முள்ளம்பன்றி மீன் என்பது ஒரு வினோதமான கடல் மீனினமாகும். இவை ஆழம் குறைந்த கடல் பகுதியில் வாழ்கின்றன. இம்மீன் தன் உடலைப் பத்து மடங்கு பருமன் உள்ளதாக மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. நீர் அல்லது காற்றைக்கொண்டு தனது உடலை ஊதிப்பெருக்கும் ஆற்றல்வாய்ந்தது. சில சமயங்களில் காற்றை நிரப்பிக்கொண்டு இரப்பர் பந்துபோல கடலில் மிதக்கும். ஏதாவது பறவை இதைப் பிடித்தாலும் இது ஊதிப்பெருகுவதால் இதை விழுங்க இயலாமல் விட்டுவிடும்.

🔵இது மெதுவாக நீந்தக்கூடியது. இந்தமீனின் உடலில் முட்கள் காணப்படுகின்றன. இம்மீன் ஊதிப்பெருகும்போது இந்த முட்கள் விறைத்து நிற்கும். சாதாரண நிலையில் இம்மீனின் முட்கள் படுக்கை நிலையில் இருப்பதால் இது நீந்தும்போது எந்த இடைஞ்சலும் ஏற்படுவதில்லை. இது ஒரு நச்சு மீன் எனபதால் இதை பெரும்பாலான மீன்கள் உண்பதில்லை. மீறி உண்டால் இது ஊதிப் பெருகி விழுங்கும் மீனின் தொண்டையில் சிக்கி அந்த மீனைக் கொன்றுவிடும்.

🔵உலகம் முழுவதும் 121 வகையான பேத்தை மீன் இருக்கின்றன, இதில் சில வகை இனப்பெருக்கத்திற்காக ஆறுகளிலும் வாழ்கின்றன. இந்த மீன்கள் எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டால் பலூன் போல உருண்டை வடிவமாகி விடுவதால் இதற்கு பலூன் மீன் எனப் பெயர் வந்தது.

பேத்தை மீன்களின் சிறப்புக்கள்
  • தனித்தனியாக இருக்கும் இதன் இரு கண்களும் எல்லாப் பக்கமும் அசையும் சக்தியுடையது.
  • மனிதனின் பல்லைப் போலவே இம் மீனின் வாயில் மேலும் இ கீழுமாக தலா இரு பற்கள் வீதம் மொத்தம் நான்கு பற்கள் இருக்கின்றன. கடலுக்கு அடியில் வாழும் சங்குகள்இ சிற்பிகள்இ நண்டுகள் இவற்றைப் பிடித்து அதன் உறுதியான மேலோடுகளை உடைத்து அதனுள்ளே இருக்கும் சதைகளை இப் பற்களின் உதவியால் உண்ணும்.
  • குளிர் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர ஏனைய கடல்களில் வாழ்கின்றன. இவை நீந்தும் விதம் ஏனைய மீன்களில் இருந்து வேறுபடுகின்றது.
  • எதிரி மீன்கள் இம் மீனின் செயற்பாடுகளைப் பார்த்து பயந்து உடனே அந்ந இடத்தை விட்டு ஓடி விடும். இம் மீனை நீரில் இருந்து வெளியே எடுத்து விட்டால் காற்றை வாய் வழியே உள்ளே எடுத்து பலூன் போல உருமாறிவிடும்.
  • வெளியே வந்தவுடன் தனது வயிற்றில் இருக்கும் காற்றையோ அல்லது நீரையோ வெளியேற்றிவிட்டு சாதாரண நிலைக்கு வந்து பின் தப்பிச் சென்று பாறைகளிடையே பதுங்கிக் கொள்ளம் வினோதமான மீன் இனமாகும்.
  • இம் மீனின் வயிற்றுப் பகுதியில் மட்டும் டெட்ராடாக்ஸின் எனும் மிகக் கொடிய விஷம் இருக்கும். ஆனால் ஜப்பானிலும்இ கொரியாவிலும் இந்த விஷம் உள்ள பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து மற்றவற்றை சமைத்து சாப்பிடுவார்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்