
சீரற்ற வீதியால் அவதியுறும் புரடொக் தோட்ட மக்கள்
ஹட்டனிலிருந்து எபோட்சிலி ஊடாக புரடொக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையானது புனரமைக்கப்படாமல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் புரொடக் தோட்டத்தில் வசிப்பவர்கள் அவசர நிலைகளின் போது 4 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றே வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.
பாதை சீர்குலைந்து காணப்படுவதால் பிரதான நகரிலிருந்து வாகனம் ஒன்றில் வர விரும்பினால் வாகன சாரதிகள் இப்பாதையில் வருவதற்கு விரும்புவது இல்லை. அதற்காக அதிகளவு கட்டணம் (2000 முதல் 2500 ரூபா) செலுத்த வேண்டிய அவல நிலையும் காணப்படுகிறது.
கடந்த காலங்களில் ஒன்றிற்கு இரு முறை இப்பாதை புனரமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல முறைப்பாடுகள் செய்தும் இதற்கான தீர்வு இதுவரை எதுவும் கிடைக்காத நிலமையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்