க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகின்றது.

குறித்த பரீட்சை இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூரத்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

452,979 பரீட்சார்த்திகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்