நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு நடை பெற்றது.

இலங்கையில் முதல்முதலில் தேயிலை நாட்டப்பட்ட இடத்தில் அமைந்துள்ள பழமையான பாடசாலையான ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கல்வி பிரதி அமைச்சர் மதூர செனவிரத்தின மற்றும் நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரட்ட ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாடசாலை பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்

இதில் பாடசாலை பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .
