மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் பலி

கட்டுகஸ்தோட்டை வராதென்ன பகுதியில் நேற்று புதன்கிழமை மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, யடஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பருடன் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்