சக கைதிகளால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் கடந்த 26 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, பலகொட பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் சிறைச்சாலையிலிருந்த சக கைதிகளினால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்