ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

 

பெம்முல்லே ரயில் நிலையத்துக்கருகில் ரயிலில் பயணித்த ஒருவர் இன்று புதன்கிழமை பிற்பகல் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடும் நெரிசலுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வகையில் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரே இவ்வாறு ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கோட்டையிலிருந்து பொல்காவலை நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து விழுந்தே இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்