சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

அம்பலாந்தோட்டைப் பகுதியில் 1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வரியின்றி மிகவும் சூட்சுமமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சட்டவிரோதமான முறையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது யுக்திய நடவடிக்கையில் குறித்த சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து 1,50,000 ரூபா பெறுமதியான 200 மென்செஸ்டர் சிகரெட்டுகள், 440 ஆகொஸ் சிகரெட்டுகள் மற்றும் ப்ளாட்டினம் 7 வகையைச் சேர்ந்த 540 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்