போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

கஞ்சா போதைப்பொருள் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்

26 வயதுடைய மாதோவ கிழ் பிரிவு வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மாதோவ பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபர் அனிந்து இருந்த காற்சட்டை பையில் இருந்து 7300 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்