தேர்தல் தொடர்பான அறிவிப்பு

தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் பட்சத்தில், அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் அல்லது ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்படி, ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பாகச் சட்டவாக்கத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல், உரிய காலப்பகுதிக்குள் நடைபெறும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்