அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனவும் எனினும் அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்