தனியார் காணியொன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது.

அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.