அம்பாறை – ஒலுவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த இளைஞர் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக சென்ற போது இவ்வாறு கடலில் மூழ்கியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக .பொலிஸார் தெரிவித்துள்ளனர்.