இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

-கிளிநொச்சி நிருபர்-

 

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குடும்பஸ்தர் ஒருவர் கடைக்கு சென்ற பொழுது அவர் மீது குழுவொன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த குடும்பஸ்தர் தன்னை பாதுகாத்து கொள்ள தலைக்கவசத்தினால் வாள் வீச்சு மேற்கொள்ளப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு வாள்களை அவ்விடத்திலேயே விட்டு தப்பி சென்றுள்ளனர்

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்