-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – மாதகல், நுணசை முருகமூர்த்தி ஆலய வருடாந்த இரதோற்சவத் திருவிழா நேற்று வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பத்தில் இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன, அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
பின்னர் முருகப் பெருமான் உள்வீதியூடாக பிள்ளை தண்டில் வலம்வந்து, சித்திரத்தேரில் எழுந்தருளியாக வீற்றிருந்து, வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது பக்தர்கள் காவடிகள், கற்பூரச்சட்டி மூலம் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
அத்துடன் தீ மிதிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.