மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளராகக் கடமையாற்றும் வீரக்குட்டி முரளிதரன், சர்வதேச ரீதியான விசேட பயிற்சி நெறியொன்றில் பங்கேற்பதற்காக தாய்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கின்றார்.
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி (Early Childhood Development) தொடர்பான மூன்று வார கால விசேட சர்வதேசப் பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்காகவே இவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றார்.
இலங்கையிலிருந்து இந்தப் பயிற்சி நெறிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று பிரதிநிதிகளில், ஒரேயொரு தமிழ் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை மண்ணைச் சேர்ந்த இவர், தனது துறை சார்ந்த ஆளுமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவையின் காரணமாக இத்தகைய உயரிய சர்வதேச வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
இவரது இந்தப் பயணம் மாவட்டத்திற்கும், வந்தாறுமூலை பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளதாகப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.