பூந்தொட்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இருவர் பலி

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரியமடித்த மற்றும் லக்கல பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 27 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.

கலேவெல நகரில் வீதியின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியில் மோட்டார்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்