
மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு சிறுவர்கள் படுகாயம்
-பதுளை நிருபர்-
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
13 மற்றும் 15 வயதுடைய அபேயபுர மாபகதேவா மற்றும் செனவிகம அரவத்த பகுதியை சேர்ந்த இரு சிறுவர்களே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்