
ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்: 4 பேர் கைது
யாழ் ஆனைக்கோட்டை பகுதியில் 1,000ற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நால்வரில், மூவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை வாளுடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை மேலும் 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய, காவல்துறையினர் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்