பங்குச் சந்தையில் தவறான தகவல்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்: ஜனாதிபதி

பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில நபர்கள் தவறான தகவல்களை பரப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்படுவதை முன்னறிவிக்கும் சில விவாதங்கள் சந்தை ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பொருளாதார மாற்றம் தொடர்பான விவாதங்கள் தோல்வியடைந்ததாக சில தனிநபர்கள் கூறுவதுடன், மற்றவர்கள் பாராளுமன்றம் கலைக்கப்படும் என கணிக்கின்றனர். அவர்கள் இந்த வகையான அறிக்கைகளை வெளியிடும் போது, ​​பங்குச் சந்தை அடுத்த நாளில் சரிவைச் சந்திக்கிறது. பின்னர் அவர்கள் பங்குகளை வாங்குகிறார்கள். அப்படி எந்த மாற்றமும் நடக்காது என்று அரசாங்கம் மக்களுக்கு உறுதியளிக்கும்போது, ​​சந்தை மீண்டும் உயர்ந்து, அவர்கள் தங்கள் பங்குகளை லாபத்தில் விற்கிறார்கள். இது அரசியல் பிரச்சினை அல்ல” என்று ஜனாதிபதி விளக்கினார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்