மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

-யாழ் நிருபர்-

பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதுளைச் செய்கை மாதிரித் தோட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார்.

பளை இத்தாவில் கிராமத்தில் குறித்த மாதிரி தோட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மாதுளை பயிர்ச் செய்கையில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோருடன் அமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது குறித்த பயிர்ச்செய்கையில் அறுவடைக்காலம் வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊடுபயிர் செய்கையின் பெறுபேறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்நிலையில் குறித்த பயிர்ச்செய்கையின் அறுவடைகளை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பொதுவான விற்பனை மையம் தொடர்பிலும் இடர்பாடுகள் குறித்தும் தெரியப்படுத்திய விவசாயிகள் குரங்குகளால் ஏபற்படும் அசௌகரியங்கள் குறித்தும் சுட்டிக்காட்டி அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்துதருமாறும் கோரியிருந்தனர்.

குறித்த தோட்டத்தின் ஏது நிலைகள் மற்றும் கருத்துக்களை அவதானத்தில் கொண்ட அமைச்சர் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்துதருவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்