மைக்ரோசொஃப்ட் நிறுவனத்துக்கு 21 பில்லியன் டொலர்கள் அபராதம்?

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் 21 பில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம், தமது வர்த்தக மற்றும் நிதி சார்ந்த மென்பொருட்களுடன், டீம்ஸ் என்ற தொடர்பாடல் செயலியையும் இணைத்து விநியோகித்துள்ளது.

இதன் ஊடாக ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டு விதிகளை அந்நிறுவனம் மீறி இருப்பதாக 2020ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளால், மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானமான 211 பில்லியன் டொலர்களில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படலாம் என்று சீ.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மைக்ரோ சொஃப்ட் இன்னும் பதில் எதனையும் வழங்கவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்