மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பாரிய விபத்து: பலர் படுகாயம் காணொளி மற்றும் புகைப்படங்கள்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கொண்டு கடையொன்றினுள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்