-முல்லைத்தீவு நிருபர்-
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து அனுமதியின்றி காட்டுத் தடிகளை வெட்டி கப்ரக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சி நீதிமன்றில் துற்படுத்திய போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.