பல மில்லியன் பெறுமதியான நகைகள்: விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை காலை பல மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸிலிருந்து குறித்த நபர் கட்டார் எயார்வேஸ் விமானமானம் கியு.ஆர் 654 மூலம் 20 மில்லியன் பெறுமதியான 995 கிராம் தங்க நகைகளுடன் நாட்டை வந்தடைந்த போது சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்