இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.