அதிசொகுசு பேருந்து விபத்து: பலர் படு காயம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ஆம் கட்டை பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து நேற்றிரவு திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பேருந்தே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாகவும் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்