Last updated on June 10th, 2024 at 11:33 am

திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்

திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்

-யாழ் நிருபர்-

உலக சிறந்த நண்பர்கள் தினத்தினை முன்னிட்டு திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்னும் கருப்பொருளில் நடைபயணம் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகியது.

இப் நடைபயணமானது யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி அங்கிருந்து சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி பயணித்து பொது நூலக முன்பாக சுயமரியாதை நடைபயணம் நிறைவடைந்தது.

இவ் நடைபயணத்தில் பிரதம அதிதியாக கனடா உயர்ஸ் தானிகர் திரு எரிக் வால்ஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க