
“திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம்“ : யாழில் நடைபயணம்
உலக சிறந்த நண்பர்கள் தினத்தினை முன்னிட்டு திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்னும் கருப்பொருளில் நடைபயணம் இன்று ஞாயிற்று கிழமை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான நடைபயணமானது அங்கிருந்து சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி பயணித்து பொது நூலக முன்பாக நடைபயணம் நிறைவடைந்தது.
இவ் நடைபயணத்தில் பிரதம அதிதியாக கனடா உயர்ஸ் தானிகர் எரிக் வால்ஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்