கண்டி நகர் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில், சமையல் எரிவாயு கையிருப்பு இல்லை என்று வாடிக்கையாளர்களிடம் பொய்யாக கூறி விட்டு, எரிவாயுவை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயுவை பதுக்கி வைத்து, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் போது, இவ்வாறு எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியாயமற்ற நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, நாடு முழுவதும் தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.