கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி கடந்த புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விடயத்தில், கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட அகழ்வுப் பணிகளில் 13 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
அதன் பின்னர் அந்த அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 05 ஆம் திகதி) மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமாகி, கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 06ஆம் திகதி) அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி முல்லைத்திவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்களும் இந்த அகழ்வுப் பணிகளில் இணைத்துக்கொள்ள படவேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இங்கு அவ்வாறு யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அகழ்வு பணியானது வியாழக்கிழமையும் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தர்.
அன்றைய அகழ்வு பணியானது இடம்பெற்று நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாகவும் நேற்று வியாழக்கிழமை கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்றிருந்து.
இதன்போது மேலதிகமான மனித எலும்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் இன்று வெள்ளிக்கிழமையும் அகழ்ந்தெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய அகழ்வின் போது சில முக்கியமான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் களத்திலிருந்து திரு..இளஞ்செழியன் எமது செய்தி சேவைக்கு வழங்கியுள்ள தகவல்கள் கீழ் வரும் காணொளியில்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்