இணைய மீம் பிரபலமான கபோசு உயிரிழந்தது

இணைய மீமில் பிரபலமான, கிரிப்டோ நாணயத்துக்கு மாற்றீடான பிட்காயின் உருவமான ஜப்பானிய நாய் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

கபோசு ( kabosu) என்றழைக்கப்படும் இந்த நாய் 18 ஆவது வயதில் தூங்கும் போது இறந்துள்ளதாக அதன் உரிமையாளர் அட்சுகோ சாடோ தெரிவுத்துள்ளார்.

இந்த நாய் ஷிபா இனு என்ற ஜப்பானிய வேட்டை நாய் இனமாகும்.

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணய மோகத்தை பகிடி செய்வதற்காக டோஜ்காயின் (Dogecoin) கிரிப்டோ நாணயம் உருவாக்கப்பட்டது.

2013- ஆம் ஆண்டில் மென்பொருள் பொறியியலாளர்களான பில்லி மார்கஸ் மற்றும் ஜேக்சன் பால்மரால் ஆகியோரால் பிட்காயினுக்கு போட்டியாக டோஜ்காயின் உருவாக்கப்பட்டது.

பெயரில் துவங்கி, செயல்பாடு வரை எல்லாவற்றிலும் டோஜ்காயின் கிரிப்டோ நாணயங்களின் பகிடி நாணயமாக இருந்தது.

இதற்காக இணைய மீமில் பிரலபமான ஜப்பானிய நாயின் பெயரையும், உருவத்தையும் தேர்வு செய்தனர்.

2020 ஆம் ஆண்டு கிரிப்டோ நாணயங்களின் ஆதரவாளரான டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் டோஜ்காயின் பற்றி டுவிட்டரில் (தற்போது எக்ஸ் தளம்) பதிவொன்றை இட்டத்தன் பின்னர் அதன் மதிப்பு அதிகரித்தது.

அதன் பின்னரும் எலோன் மஸ்க் டோஜ்காயின் கிரிப்டோ நாணயத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தினார்.

அதாவது, 2022 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் சமூக ஊடக தளமான டுவிட்டரை வாங்கி அதன் சின்னமான நீல பறவையை மாற்றி கபோசுவின் படத்தை பதிவிட்டார். இதன் காரணமாக கடந்த ஆண்டு டோஜ்காயின் கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து.

எலோன் மஸ்க் டுவிட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றியுள்ளார்.

Coingecko.com என்ற தரவுத் தளத்தின்படி, சுமார் 23.6 பில்லியன் டொலர் சந்தை மூலதனத்துடன், டோஜ்காயின் தற்போது ஒன்பதாவது கிரிப்டோ நாணயமாக உள்ளது.

“இந்த ஒரு நாய் உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது” என டோஜ்காயின் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.instagram.com/kabosumama/?utm_source=ig_embed&ig_rid=84634f7d-75d3-4961-9ee1-65ea29b39e7f

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்