Sri Lanka Tamil News Site

3வது கட்ட உர விநியோகம்

- Advertisement -

-யாழ் நிருபர்-

தொல்புரம் கமநல சேவை நிலையத்தின் 2022/2023 ஆண்டின் 3வது கட்ட உர விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை அராலி தெற்கு, அராலி கிழக்கு, அராலி மேற்கு, அராலி மத்தி மற்றும் அராலி வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உர விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.

- Advertisement -

10 – 60 பரப்பு வயல்களைக் கொண்ட விவசாயிகளுக்கு இவ்வாறு இலவச உர விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

உரத்தினை வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றிகள். எமக்கு 50 கிலோ உரம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த உரம் எமது வயல் நிலங்களுக்கு போதுமானதாக இல்லை.

அத்துடன் உரமும் பிந்தி கிடைத்ததால் பயிர்களின் விளைச்சல் எவ்வாறு இருக்கும் என தெரியாமல் உள்ளது, என்றனர்.

 

- Advertisement -