சர்வதேச யோகா தின நிகழ்வு, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில், இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில், மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷனின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷனின் உதவிப் பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தஜி மஹராஜ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக ஊவாவெல்லஸ பல்கலைக்கழகத்தின் நூலகர் கலாநிதி ரி பிரதீபன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவர் வைத்தியர் சி வாமதேவன், மட்டக்களப்பு மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே மதிவண்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் யோகா மாணவர்களின் யோகாசன நிகழ்வுகள் இடம்பெற்றன.