மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சுற்றாடல் தினம் – 2024

ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் ஜூன் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. “நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சுற்றாடல் தினத்தின் பிரதான நிகழ்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு “பிளாஸ்ரிக் பாவனையின் பாதக விளைவுகள் ” தொடர்பான விழிப்புணர்வு குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டதுடன், 5வது சிறப்பு செய்திமடல் வெளியீடப்பட்டது.

மேலும் சிறந்த கிராம மட்ட பசுமைக் கழக செயற்பாடுகளுக்கான பாராட்டினை ” களுதாவளை மத்தி பசுமைக்குழு” பெற்றுக்கொண்டதுடன், அந்த பிரிவின் கிராம உத்தியோகத்தர் திரு எஸ். ரதீசன் கெளரவிப்பினை பெற்றுக்கொண்டார்.

சிறந்த அலுவலக வீட்டுத் தோட்ட உருவாக்கத்திற்கான பாராட்டு மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பழமரக் கன்று விநியோகம்
என்பன பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.

மேலும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களினாலும் (407) தங்கள் பிள்ளைகளின் பங்குபற்றுதலுடன் வீடுகளில் மரநடுகை இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க