ரயில் விபத்து வீதம் உயர்வு

 

கடந்த நான்கு மாதங்களில், 42 பேர் ரயில் விபத்துகளில் சிக்கியும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ரயில் விபத்தில் 84 பேர் காயமடைந்ததாகவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் விபத்துக்கள் மற்றும் தற்கொலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே மேம்பாட்டிற்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ரயில் மோதி விபத்துகளில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், 2023ஆம் ஆண்டு ரயில் மோதியதில் 148 பேர் உயிரிழந்துள்ளதுடன் 248 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்