சட்டவிரோத கடத்தல்கள் அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மாதத்தை விட இம்மாத நடுப்பகுதியில் பட்டப்பகலில் வீடுகள் உடைப்பு சட்டவிரோதமாக கால்நடை கடத்தல்கள் தலைக்கவசம் இன்றி பயணித்தல் என்பன அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில் பாதுகாப்பு காவலரணில் கடமைக்காக இருக்கின்ற பொலிஸார் இராணுவத்தினர் கைத்தொலைபேசி மோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை விட வீதிகளில் சட்டவிரோதமாக வாகனங்களை தரித்து வைத்தல் வீதி விளையாட்டுக்களும் அதிகரித்துள்ளன.கடமைக்காக இங்கு வருகின்ற போக்குவரத்து பொலிஸார் உணவங்களில் தேநீர் அருந்தி கடமைத் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதை காண முடிகின்றது.

இதை விட அதிகாலை வேளையில் கல்முனை சாய்ந்தமருது காரைதீவு பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் கடற்கரை மண் கடத்தல் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் குறித்த கடத்தல்களை தடுப்பதற்கு வழமை போன்று இராணுவத்தினர் கடற்படையினரின் வீதி ரோந்து நடவடிக்கை அவசியம் குறித்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்