தைத்த ஆடைகள் ஏற்றுமதியில் அதிகரிப்பு

6

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தைத்த ஆடைகள் ஏற்றுமதி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், 417.81 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதன் ஊடாக இந்த ஆண்டு இலங்கையின் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உருவாகி இருப்பதாக துறைசார்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் பரவல் காலத்தில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தைத்த ஆடைகளின் பெறுமதி கணிசமாக வீழ்ச்சியடைந்தது. எனினும் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரியளவான கேள்வியின் காரணமாக, மொத்த ஆடை ஏற்றுமதி 5,512.58 மில்லியனாக உயர்ந்தது.

பின்னர் ஆடைகளுக்கான கேள்வி சமநிலையடைந்து கடந்த 2023ம் ஆண்டு 4,445.93 மில்லியனாக பதிவாகி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath