-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறையை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்றின் தந்தையான, சொக்கலிங்கம் கிருஷ்ணராஜ் (வயது 34) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவரான குறித்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு தவறான முடிவு எடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.