நான் சிங்கிள் தான், ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகினர். அப்படம் கொடுத்த வெற்றி தமிழ்இ தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக ஸ்ருதி ஹாசன் முன்னேறினார்.

மேலும் இவர் தமிழில் விஜய், அஜித்இ சூர்யா, தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் என அநேக நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், திடீரென சிலகாலம் படங்களில் இருந்து விலகியிருந்தார். தனது பாடல் ஆர்வத்தின் காரணமாக இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய அவர், அண்மையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் படத்தில் நடித்திருந்தார்.

அதேவேளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த இனிமேல் ஆல்பம் பாடலிலும் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார் தற்போது இவர் கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் அடுத்த படமான டாக்ஸிக் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பருடன் பிரேக் அப் செய்ததை உறுதி செய்தார். இந்த நிலையில்இ சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது, ரசிகர் ஒருவர், நீங்கள் Single ஆ Committed-ஆ என்று கேள்வி கேட்டபோது ஸ்ருதி ஹாசன் நான் இப்போது சிங்களாக இருக்கின்றேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன் என பதிலளித்து ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்