யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் பெருமளவு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைப்பற்ற கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்