கண்டியில் கடும் மழை: வெள்ளத்தில் மூழ்கிய தொடருந்து நிலையம்

கண்டி நகரில் நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

இதேவேளை ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும் வடிகால்கள் மூடப்பட்டமையே, தொடருந்து நிலையம் நீரில் மூழ்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்டி நகரில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஒரே நேரத்தில் பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதையடுத்து, போகம்பரவிற்கு பின்புறமாகவுள்ள மலைப் பகுதியிலிருந்து பெருமளவான வெள்ள நீர்இ ரயில் நிலையத்தை நோக்கி பெருக்கெடுத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ரயில் நிலையத்தின் முன்பகுதி முற்றாக நீரில் மூழ்கியதுடன் ரயில் பாதைகளும் நீரில் மூழ்கியிருந்தது.

இதேவேளை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்