பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை: 6 இளைஞர்கள் கைது

ஹட்டன் ரயில் நிலையத்தில் பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 6 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவிக்கு பல தடவைகள் தொல்லை கொடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மாணவி தனது பெற்றோருக்கு அறிவித்து பின்னர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 இளைஞர்களையும் பொலிஸார் ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகை வந்துள்ளதாகவும் கொழும்பில் வசிக்கும் 20 முதல் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து ஆரம்பகட்ட விசாரணைகளின் பின் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்