பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும் இருவரும் இது குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தங்களது சமூக வலைத்தளத்தில் ”திருமணம் ஆன 11 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட யோசனைக்கு பின்னர் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம்.

ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் எங்களது தனி உரிமையை புரிந்து கொண்டு இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்