கந்தளாய்-வென்றாசன்புர குளத்திற்கு அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், T-56 ரகத் துப்பாக்கி தோட்டாக்கள் கந்தளாய் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கந்தளாய் அவசர பொலிஸ் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் விஜேவர்தன வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேடுதலின் போது, மொத்தம் 51 தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசின் (Magazine) என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்களின் விபரங்கள்:
T-56 ரக தோட்டாக்கள்: 47
GTNG தோட்டாக்கள்: 02
S.L.R. தோட்டா: 01
9 MM தோட்டா: 01
மெகசின் (Magazine): 01
குறித்த தோட்டாக்கள் யாரால், எதற்காக அங்கு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்