தனது பேத்தியை பாலர் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பேத்தி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மாத்தளை இராஜ வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, இன்று சனிக்கிழமை காலை சுமார் 9.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 74 வயதுடைய நபர் ஒருவர், தனது பேத்தியை பாலர் பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கையில், மாத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றிய லொறி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் தூக்கி எறியப்பட்ட பேத்தி, பலத்த காயங்களுடன் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியை கைது செய்த மாத்தளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.