இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு தடவை தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாயாகவும் அத்துடன் ,22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.