உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதற்குச் சார்பாக உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,829 டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் இன்று காலை வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் ஒட்டுமொத்தமாக 2,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 370,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
நேற்று 400,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 402,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.