வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே: இலங்கை கிரிக்கெட் வீரர் ஆதங்கம்

-யாழ் நிருபர்-

வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே என இலங்கை கிரிக்கெட் வீரர் ஜோய்சா நுவன் தரங்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் – இராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நண்பர்கள் helping hands அறக்கொடை சார்பில் விருது வழங்கும் விழா நேற்று இடம்பெற்றது.

நண்பர்கள் உதவுங்கரங்கள் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும், போட்டிகளை காண வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச கிரிக்கெட் கிளப், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பல்வேறு விதிகளை மாற்றியுள்ளது.

வேகப்பந்து வீச்சு மூலம் அதிக ஓட்டஙகளை விட்டுக்கொடுப்பதும் வருத்தமாக தான் உள்ளது. திருப்பாட்டு வீரர்கள் ஓட்டங்களை குவிப்பதில் கருணை காட்டுவதில்லை. 2004 – 2005 ஆண்டுகளில் விதிகள் பந்து வீச்சாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது டி – 20 போட்டிகளிலும் விதிகள் மாற்றப்பட்டுள்ளதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் துடுப்பாட்ட சபை மாவட்ட தலைவர் பரூக் அப்துல்லா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

ராமநாதபுரம் துடுப்பாட்ட சபை மாவட்ட செயலாளர் மாரீஸ்வரன், மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.

முன்னாள் பல்துறை துடுப்பாட்ட வீரர் மாரீஸ்வரன், சத்தியேந்திரன், மகேந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா, இலங்கை வீரர் சீக்குகெ பிரசன்னா, மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் வீரக்கோடி தனுஷ்க ஜீவக்க, பிங்கார சர்வதேச கிரிக்கெட் கிளப் பயிற்றுநர் காமகே அசெல பெரேரா ஆகியோர் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

கிரிக்கெட் போட்டிகளின் தேசிய நடுவர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார்.

இதில் துடுப்பாட்ட வீரர்கள், ஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்